செய்திக் குறிப்புகள்

ஆங்கிலப்படவுலகிலும் வரவேற்பு – சோபிதாதுலிபாலா மகிழ்ச்சி

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளவரசி வானதியாக நடித்து தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் சோபிதா துலியா.

‘மேட் இன் ஹெவன்’ மற்றும் ‘தி நைட் மேனேஜர்’ போன்ற இந்தி இணையத் தொடர்களில் தனது அற்புதமான நடிப்பிற்காகக் கொண்டாடப்பட்டவர் சோபிதா துலிபாலா.

அனுராக் காஷ்யப் இயக்கிய படமான ‘ராமன் ராகவ் 2.0’ படத்தில் சோபிதா துலிபாலாவின் நடிப்பு, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டார். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ‘குரூப்’ மற்றும் தெலுங்கில் ‘கூடாச்சாரி’, ‘மேஜர்’ போன்ற வெற்றிப் படைப்புகளில் பங்குகொண்ட சோபிதா, தற்போது சர்வதேச அரங்கில் நுழையத் தயாராகிவிட்டார்.

தேவ் படேல் இயக்கிய ஆஸ்கார் விருது பெற்ற ஜோர்டான் பீலேவுடன் இணைந்து யுனிவர்சல் பிக்சர்ஸின் தயாரிப்பான “மங்கி மேன்” என்ற த்ரில்லர் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

“விப்லாஷ்” போன்ற விருது பெற்ற திரைப்படங்களில் பணியாற்றி, அவரது பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஷரோன் மேயர், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படம் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அந்த டிரெய்லர் காண……

இந்த முன்னோட்டம் வெளியான பின்பு சோபிதாதுலிபாலாவுக்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. அதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

Related Posts