நெட்ஃபிளிக்ஸ் செய்த தவறு – ஆர்கேநகர் இணையத்தில் வெளியானதின் பின்னணி
வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ், சம்பத், சனா, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘ஆர்.கே.நகர்’. ‘வடகறி’ படத்தின் இயக்குநர் சரவண ராஜன் இயக்கியிருந்தார். நீண்ட நாட்களாக இந்தப் படம் தயாரிப்பிலிருந்து வந்தது.
பொருளாதாரச் சிக்கலால் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி பல முறை அறிவிக்கப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
தற்போது ‘பொன்மகள் வந்தாள்’ இணையதள வெளியீடு பிரச்சினை நடந்து கொண்டிருப்பதால், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று ‘ஆர்.கே.நகர்’ படத்தை டிஜிட்டலில் வெளியிட்டு விட்டனர்.ஏப்ரல் 29 முதல் நெட்ஃபிளிக்ஸ் இணையத்தில் ‘ஆர்.கே.நகர்’ படத்தை அதிகாரபூர்வமாகக் காணலாம்.
இதனை இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே தங்களுடைய ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தப்படம் இணையத்தில் வெளியானதன் பின்னணியில் பெரிய கதை இருக்கிறதாம்.இதுகுறித்து திரைத்துறையில் உலவும் தகவல்….
இப்படத்தைத் திரையரங்குகளில் வெளீயிட வியாபாரம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், இப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமைக்காக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனராம். அது முழுமையடையும் முன்னரே நெட்ஃபிளிக்ஸ் பக்கத்தில் இப்படம் வெளியாகிறது என்கிற விளம்பரம் பகிரப்பட்டதாம்.
இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்புத்தரப்பு, நீங்கள் இப்படிப் பகிர்ந்ததால் எங்கள் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது எனவே எங்களுக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் போய்விட்டதாம்.நீதிமன்ற உத்தரவுப்படி இப்படத்துக்கு இழப்பீடாக நான்கரை கோடி கொடுத்து படத்தை வெளீயிடும் உரிமையைப் பெற்றதாம் நெட்ஃபிளிக்ஸ்.
ஆக, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் செய்த தவறின் காரணமாகவே இப்படம் நேரடியாக அங்கே வெளியானதென்கிறார்கள்.











