ரஜினி படத்தில் கீர்த்திசுரேஷுக்கு என்ன வேடம்?
தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் நடிகை ஜோதிகா, பிரபுவின் மனைவியாக நடித்திருந்தார்.
இப்படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படம் போல இது ஒரு குடும்பக்கதையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.











