ரஜினியின் அடுத்த பட இயக்குநர் பாண்டிராஜ்?
சிவா இயக்கத்தில் தயாராகும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அண்ணாத்த படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது ஏஜிஎஸ் நிறுவனம் என்றும் சொல்லப்பட்டது.
படத்தின் மொத்தச் செலவுத் தொகையைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் வியாபாரத்தை விட அதிகமாக வந்ததால் ஏஜிஎஸ் நிறுவனம் பின் வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அந்தப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். பாடிராஜ் இப்போது சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதுவாவது சொன்னபடி நடக்குமா? இதிலும் மாற்றம் வருமா? என்பது போகப்போகத் தான் தெரியும்.









