சினிமா செய்திகள்

மீண்டும் வரும் நிவேதாபெத்துராஜ் – ராஜுசுந்தரத்துடன் சண்டை

2016 ஆம் ஆண்டு வெளியான ஒருநாள்கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நிவேதாபெத்துராஜ். அதன்பின், உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், ஜெயம்ரவியுடன் டிக்டிக்டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார்.

இவற்றிற்கிடையே தெலுங்கிலும் நடித்தார்.

இங்கு ஏற்பட்ட சில கசப்புகளாலும் தெலுங்கில் கிடைத்த வரவேற்பாலும் இப்போது தெலுங்குப் படங்களில் கூடுதல்கவனம் செலுத்திவருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் அறிவழகனிடம் உதவியாளராகப் பணியாற்றிய மணிகண்டன், தான் இயக்கும் புதியபடத்துக்காக கதாநாயகியை மையப்படுத்திய கதை ஒன்றை எழுதியிருந்தார்.

அந்தக்கதையை நிவேதாபெத்துராஜிடம் சொல்ல அவருக்கும் அந்தக்கதை பிடித்துவிட்டது. எனவே சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் நிவேதாபெத்துராஜ்.

வலுவான கதையம்சம் கொண்டுள்ள கதை என்பதால் இப்படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டு நடன இயக்குநர் ராஜுசுந்தரத்தை அணுகியிருக்கிறார்களாம்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு வட இந்தியாவில் நடக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

நிவேதாபெத்துராஜ் தெலுங்கில் மிகவும் புகழ்பெற்றிருப்பதால் இப்படம் இரண்டு மொழிகளிலும் தயாராக வாய்ப்பு இருக்கிறது.

Related Posts