சினிமா செய்திகள் நடிகை

ஓவியாவின் காதல் குறித்து பரவும் புதியசெய்தி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் நடிகை ஓவியா ஆகிய இருவரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இருவரும் காதலிப்பது போல அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டது. பின்னர், காதலிக்கவில்லை என்றனர். இன்னும் இது உண்மையா? பொய்யா? என்ற கேள்வி இதுவரையில் இருந்துகொண்டேயிருக்கிறது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை. ராகவா லாரன்ஸுடன் ‘காஞ்சனா 3’, விஷ்ணு விஷாலுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘90 எம்எல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஓவியா.

‘ராஜபீமா’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஆரவ். ஆஷிமா நர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில், ஆரவ்வுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளார் ஓவியா.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஓவியா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளித்துள்ள ஆரவ், “சிறப்புத் தோற்றம் மட்டுமல்ல, மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும். ஓவியா ஆர்மிகளே… தயாராக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஓவியா ரசிகர்கள் அதைப் பரவலாகப் பகிர்ந்து மகிழ்கிறார்கள்.

Related Posts