தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் வெற்றியடைய வாழ்த்திய விஜய்சேதுபதி
நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், ஒரு பக்கக் கதை ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரன், தற்போது இயக்கியுள்ள படம் சீதக்காதி.
இந்தப் படத்தில் வயதான நாடக நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.இது அவருடைய 25 ஆவது படம்.
இயக்குநர் மகேந்திரன், பார்வதி நாயர், அர்ச்சனா, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரம்யா நம்பீசன் இந்தப் படத்தில் நடிகையாகவே வருகிறார்.
அப்பா – மகன் என முதன்முறையாக இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
டிசம்பர் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. இப்படம் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 13) காலை ‘சீதக்காதி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, “என் 25 ஆவது படமாக எதைப் பண்ணலாம் என எந்த ஒரு சிந்தனையும் எனக்குள் இல்லை. அந்த நேரத்தில்தான் இந்தப் படம் எனக்கு தானாக அமைந்தது. இவ்வளவு படங்கள் பண்ண எஅன்க்கு ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இந்தக் கதையை நம்பிய தயாரிப்பாளர்களான சுதன், உமேஷ், ஜெயராம் ஆகியோருக்கு நன்றி. இந்தக் கதை அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும்.
இந்தப்படம் நன்றாக ஓடும். இது மட்டுமின்றி 21 ஆம் தேதி வெளியாக்விருக்கும் மாரி 2, கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், அடங்கமறு ஆகிய எல்லாப் படங்களும் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.











