September 7, 2024
செய்திக் குறிப்புகள்

13 மொழிகளில் வெளியாகும் படம் மார்டின் – விவரங்கள்

நடிகர் அர்ஜூன் கதையில், இயக்குநர் ஏ.பி.அர்ஜூன் இயக்கத்தில், துருவா சர்ஜா நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின்.இப்படத்தில் துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு வசனங்கள் எழுதியிருப்பவர் ஏபி அர்ஜூன்,எழுத்துக் குழு: சுவாமிஜி, கோபி,இசை: மணி சர்மா,பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு: ரவி பஸ்ரூர்,ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே,படத்தொகுப்பு கே எம் பிரகாஷ். வாசவி எண்டர்பிரைசர்ஸ் (Vasavi Enterprises) சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் கே.மேத்தா,சுராஜ் உதய் மேத்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

செப்டெம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் கெ.மேத்தா, அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் உதய் கே.மேத்தா பேசியதாவது……

பிரத்தியேகமாகப் பாடல்களை முதன் முறையாக உங்களுக்குத் திரையிட்டுள்ளோம்.இரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜூன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவா சர்ஜா இப்படத்திற்காக மிக மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார்.இயக்குநர் மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். படம் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி என்றார்.

நடிகர் அர்ஜூன் பேசியதாவது……

என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.இந்தப்படத்தில் எனக்கு ரெண்டு ரோல்,துருவாவின் மாமா ஆனால் அவனை நான் என் மகனாகத் தான் நினைக்கிறேன்.இன்னொன்று திரைக்கதை எழுத்தாளர்.துருவாவின் ஐந்தாவது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது.அவனுக்கென பெரிய இரசிகர் பட்டாளம் இருக்கிறது.அவனுக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக்கதையை எழுதியிருக்கிறேன்.உண்மையில் தயாரிப்பாளர் தான் ஹீரோ, இந்தப்படத்திற்கு அப்படி செலவு செய்துள்ளார்.100 கோடிக்கு மேல் செலவு செய்து,இரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள்.13 மொழிகளில் இப்படம் டப்பாகி ரெடியாகி இருக்கிறது.உலகம் முழுக்க யார் பார்த்தாலும்,இந்தப் படம் பிடிக்கும்.ஆக்சன் எமோஷன் என எல்லாம் இருக்கிறது.வித்தியாசமான திரைக்கதை.நிறைய ஃபாரின் ஆர்டிஸ்ட் நடித்துள்ளார்கள்,துருவாவிற்கு இந்தப்படம் பெரிய பிளாக்பஸ்டர் ஆக இருக்கும்.அனைவருக்கும் என் வாழ்த்துகள், நன்றி என்றார்.

சரிகம நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசியதாவது….

அர்ஜூன் சார் சொன்னது மாதிரி,உலகம் முழுக்க இரசிக்கும்படியான படம் இது.எல்லோருக்கும் பிடிக்கும்.3 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளன.கண்டிப்பாக எல்லா மொழிகளிலும் ஹிட்டடிக்கும்,பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கிய உதய் மேத்தா சாருக்கு நன்றி.துருவா இப்படத்தை பிரபலப்படுத்த முழுமையாகக் களமிறங்கியுள்ளார்.கதை எழுதியுள்ள அர்ஜூன் சார் அசத்தியுள்ளார்.இரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இப்படம் இருக்கும் என்றார்.

நடிகை வைபவி பேசியதாவது……

இது எனக்கு மிகவும் சிறப்பான நாள்,எங்கள் படத்தின் பாடலைப் பார்த்துள்ளீர்கள்,இந்தப்படத்தில் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம்,மிகச் சிறப்பான படமாக வந்துள்ளது.உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி என்றார்.

நடிகர் துருவா சர்ஜா பேசியதாவது…..

தமிழில் எனக்கு ரெண்டாவது படம்,செம்ம திமிரு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மார்டின் படத்திற்கும் நல்ல ஆதரவைத் தாருங்கள்,இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் என் நன்றி.என் காட்ஃபாதர்,எனக்காக எல்லாம் செய்யும் அர்ஜூன் சாருக்கு நன்றிகள்.இந்தப்படத்தை முழுமையான ஆக்சன் படமாக,புதிய தளத்தில் இருக்கும்படியான, படைப்பாக எடுத்துள்ளோம்.உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts