சினிமா செய்திகள்

மணிரத்னத்தைப் பாதுகாத்த சிம்பு, விஜய்சேதுபதி

காற்று வெளியிடை படம் சரியாகப் போகாததால் தனது அடுத்த படத்தை வெற்றிப்படமாக்கியே தீரவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருக்கு லைகா பிரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கை கொடுத்துள்ளது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய படத்துக்கு செக்கச்சிவந்த வானம் என தலைப்பு வைக்கப்பட்டு பிப்ரவரி 9,2018 அன்று முதல்பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய படத்தில் அரவிந்த் சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் பலர் நடிக்கவிருக்கிறார்கள்.

செக்கச்சிவந்த வானம் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். பிப்ரவரி 12-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தற்போது வெற்றி நாயகராக இருக்கும் விஜய்சேதுபதி எப்போதும் ரசிகர் பலம் மிகுந்த சிம்பு ஆகியோருடன் கைகோர்த்து பாதுகாப்பாகப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் மணிரத்னம். இந்த நடிகர்களுக்காகத்தான் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்ததாகச் சொல்லப்படுகிறது.

Related Posts