December 19, 2025
சினிமா செய்திகள்

எல் ஐ கே வெளியீடு உறுதி – வியாபாரங்களில் நடந்த அதிரடிகள்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் எல் ஐ கே.இப்படத்தை,விக்னேஷ்சிவன் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து உள்ளன.

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி செட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம், டிசம்பர் 18 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன விற்பனை ஆகவில்லை என்றும் அதனால் அறிவித்தபடி இந்தப்படம் வெளியாகாது என்றும் சொல்லப்பட்டது.

இப்போது படம் அறிவித்தபடி டிசம்பர் 18 அன்று வெளியாவது உறுதியாகிவிட்டதாம்.

இணைய ஒளிபரப்பு மற்றும் தொகா ஒளிபரப்பு உரிமைகள் விற்பனையாகிவிட்டனவா என்றால்? இல்லை என்றே பதில் வருகிறது.

பிறகெப்படி படம் வெளியீடு?

இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்றாலும் முதல்பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரிக்க இயக்குநர் விக்னேஷ்சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

இதனால்,இணைய ஒளிபரப்பு மற்றும் தொகா ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை விக்னேஷ்சிவனிடம் கொடுத்துவிட்டாராம் லலித்குமார்.

அதனால் அவர், படம் வெளியீட்டுக்குப் பின்புகூட நான் விற்பனை செய்துகொள்கிறேன்,சொன்னபடி படத்தை வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டதையடுத்து படத்தை வெளியிட முன்வந்திருக்கிறார் லலித்குமார்.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை லலித்குமாரிடம் இருக்கிறது.அதனால் அவரே படத்தை வெளியிடப் போகிறாரா? அல்லது எம்ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் விற்பனை செய்யப்போகிறாரா? எனக் கேட்டால், இரண்டும் இல்லை, டிஸ்டிரிபியூசன் எனப்படும் விநியோக அடிப்படையில் படத்தைக் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அவர் இந்தமுறையில் படத்தைக் கொடுத்திருப்பது ரெட்ஜெயண்ட் நிறுவனத்திலிருக்கும் செண்பமூர்த்தியிடம் என்று சொல்லப்படுகிறது.

அவர், எம்எஸ்எம் எனும் அவருடைய சொந்த நிறுவனத்தின் மூலம படத்தை வெளியிடவிருக்கிறாராம்.இதற்காக சுமார் பதினைந்து கோடி முன்தொகை கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

படத்தின் மீதான அதீத நம்பிக்கையின் காரணமாக, இணைய ஒளிபரப்பு மற்றும் தொகா ஒளிபரப்பு ஆகிய விற்பனைகளை முடிக்காமல் இயக்குநரும், குறைந்தபட்ச பாதிகாப்பு அடிப்படையில் கொடுக்காமல் விநியோக அடிப்படையில் கொடுத்திருக்கும் தயாரிப்பாளரும் படத்தை வெளியிடும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் மீதான அதீத நம்பிக்கை காரணமாகவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.

Related Posts