செய்திக் குறிப்புகள்

கார்த்தி பிறந்தநாளில் நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள்

நடிகர் கார்த்தியின் 48 ஆவது பிறந்தநாள் நேற்று. அதையொட்டி நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தன.அவை பற்றிய செய்திக்குறிப்புகள்.

1

நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த இரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் இரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இன்று (மே 25 ஆம் தேதி) நடிகர் கார்த்தி தனது 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த இரத்த தான முகாமில் சுமார் 150 பேர் இரத்த தானம் செய்தார்கள்.

மேலும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறந்த 100 குழந்தைகளுக்கு உடை மற்றும் தாய்மார்களுக்கு பரிசுப் பெட்டகம் கொடுத்து இருக்கிறார்கள்.

கார்த்தியின் இரசிகர்கள் கடந்த இரண்டு வாரங்களாக அன்னதானம், நீர் மோர் வழங்குதல், ஆகிய நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2

கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்திருக்கும் மெய்யழகன் படத்தின் முதல்பார்வையை அவரது அண்ணன் சூர்யா மே 24 அன்று வெளியிட்டார்.அதையொட்டி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பி.

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

கார்த்தியின் 27 ஆவது படமான இப்படத்திற்கு “மெய்யழகன்“ என்று வைத்துள்ளார்கள். கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Karthi - Premkumar

Karthi – Premkumar

இன்னொரு மிக முக்கியமான கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே, தேவதர்ஷ்னி, ஜெயபிரகாஷ், ஶ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி, ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

இப்படத்தை, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து சூப்பர்ஹிட்டான  96 படத்தை டைரக்ட் செய்த ச.பிரேம் குமார் டைரக்ட் செய்கிறார். அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். 96 படம் மூலம் மெகா ஹிட்டான பாடல்களை தந்த இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா மீண்டும் டைரக்டர் ச.பிரேம்குமாருடன் இப்படம் மூலம் கைகோர்க்கிறார். 

இதன் படபிடிப்பு கும்பகோணம், சிவகங்கை பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று முடிவடைந்தது. எடிட்டிங், டப்பிங் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. 

இணை தயாரிப்பாளர் – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கூறுகையில், “கார்த்தி மற்றும் அரவிந்த் ஸ்வாமி தங்களது சிறந்த நடிப்பைத் தந்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் இறுதி வடிவத்தைக் கண்ட இயக்குநர் பிரேம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

நமது சொந்தங்களின் முக்கியத்துவத்தையும், பண்பாட்டு வேர்களையும் வலியுறுத்தக்கூடிய ஒரு நல்ல குடும்பப் படமாக இது இருக்கும்.” என்று கூறினார்.

தயாரிப்பு: ஜோதிகா மற்றும் சூர்யா, இணை தயாரிப்பு: ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜு,எடிட்டிங்: ஆர்.கோவிந்தராஜ்,புரொடக்‌ஷன் டிசைனர்: ராஜீவன்,பாடல்கள்: கார்த்திக் நேத்தா – உமாதேவி.

3

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் இரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி.ஆர்.கே.கிரண் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கும் இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

Vaa Vathiyaar

Vaa Vathiyaar

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் இரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக கார்த்தி காக்கி உடையும், கலர் கலரான கண்ணாடியையும் அணிந்து தோன்றுவதும், பின்னணியில் தமிழ்த் திரையுலகத்தின் சாதனை செய்து, இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாம்பவான் எம்ஜிஆரின் வேடமணிந்து கலைஞர்கள் நிற்பதும்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Related Posts