காலா படத்தில் மாற்றம் – ரஜினி உத்தரவு பா.ரஞ்சித் அதிர்ச்சி
- ரஜினி நடிக்கும் காலா படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் திடீரென இயக்குநர் பா.ரஞ்சித்தை அழைத்த ரஜினி, படத்தை முழுமையாகப் பார்க்கவேண்டும் என்று கேட்டாராம்.
வேலைகள் முடியட்டும் என்று ரஞ்சித் சொன்னதையும் ஏற்காமல் உடனே படத்தைப் பார்த்திருக்கிறார்.
படத்தில் சில இடங்களில் அம்பேத்கர் படம் பிண்ணனியில் இருந்ததாம். அவற்றை முழுமையாக நீக்கவேண்டும் என்று சொல்லிவிட்டாராம்.
அதோடு குறியீடுகளாக ரஞ்சித் வைத்திருந்த சில காட்சிகளையும் மாற்றியமைக்க உத்தரவிட்டாராம்.
இதனால் ரஞ்சித் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். ஆனாலும் ரஜினியின் உத்தரவை மீறமுடியாமல் சொன்னவற்றைச் செய்துவிட்டாரம்.
இதனால் ரஞ்சித் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.











