சினிமா செய்திகள் நடிகர்

விஜய்க்கு மறுப்பு சூர்யாவுக்கு சம்மதம்

இந்தியில் நிறையப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பொம்மன் இரானி.

அமீர்கானின் த்ரீ இடியட்ஸ்படத்தில் கல்லூரி முதல்வர் வேடத்தில் நடித்திருப்பார்.

இயக்குநர் ஷங்கர் விஜய்யை வைத்து இயக்கிய த்ரீ இடியட்ஸ் படத்தின் மொழிமாற்றான நண்பன் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினார்.

இந்தியில் அவர் நடித்திருந்த கல்லூரி முதல்வர் வேடத்திலேயே அவரை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதனால் அந்த வேடத்தில் சத்யராஜ் நடித்தார்.

அதற்கென்ன இப்போது? என்கிறீர்களா?

ஷங்கர் விஜய் கூட்டணியில் தயாரான படத்தில் நடிக்க மறுத்த பொம்மன் இரானி, இப்போது கே.வி.ஆனந்த் சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

இந்தத் தகவலைக் கேட்டு இயக்குநர் ஷங்கர் ஆச்சரியமடைந்தாராம். நான் கேட்டபோது மறுத்தவர் இப்போது எப்படி ஒப்புக்கொண்டார் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.

Related Posts