ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் துருவ்விக்ரம் போட்டி
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள தெலுங்குப் படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’. தமன் இசையமைத்துள்ளார்.
சனவரி 12 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.அதோடு தெலுங்குத் திரையுலகில் பெரும் வசூல் சாதனையையும் நிகழ்த்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
உடனே இப்படத்தைத் தமிழில் எடுக்கப் பலர் போட்டி போடுகின்றனராம். இப்படத்தின் தமிழ் மொழிமாற்று உரிமையைக் கைப்பற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் நிறுவனங்கள் போட்டியிடுவதாகச் சொல்லப்படுகிறது.
இயக்க்குநர் மோகன்ராஜா தன் தம்பி ஜெயம்ரவியை வைத்து இந்தப்படத்தைத் தமிழில் எடுக்க விரும்பி உரிமை கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
அடுத்து லைகா நிறுவனம் இப்படத்தின் தமிழாக்க உரிம்மையைக் கேட்டு அணுகியதாம். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டிருப்பதாகவும், அதனால் இந்தப்படத்தின் மொழிமாற்றில் அவரை நடிக்க வைக்கிறோம் என்று சொல்லியே அந்நிறுவனம் கேட்டிருக்கிறதாம்.
இவர்கள் மட்டுமின்றி, நடிகர் விக்ரம் தன் மகன் துருவ் விக்ரமுக்காக இந்தப்படத்தின் தமிழ் உரிமையைக் கேட்கிறாராம்.
இப்படிப் பல பெரிய ஆட்கள் கேட்பதால் தமிழாக்க உரிமைக்கான விலையைப் பல மடங்கு உயர்த்திச் சொல்கிறதாம் தெலுங்குப் பட நிறுவனம்.
இவர்களில் யார்? இப்படத்தின் உரிமையைப் பெறப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.











