கெளதம் மேனனுக்கு அடித்த அதிர்ஷ்டம்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட குயின் இணையதளத் தொடரை உருவாக்கினார் கெளதம் மேனன்.
இணையதளத் தொடர்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராக அது அமைந்தது.
இதனால், இயக்குநர் கெளதம் மேனனுக்கு அதனால் மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்கிறார்கள்.
ஆம், அந்தத் தொடரின் பெரிய வெற்றி காரணமாக அத்தொடரின் அடுத்த பாகத்தை உருவாக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறதாம்.
குயின் தொடரைத் தயாரித்த நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க முன்வந்திருக்கிறதாம்.
இதற்காக அவருக்கு இருபது கோடி தொகை ஒதுக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதனால் அவரும் உற்சாகமாக இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் இருக்கிறாராம்.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவநட்சத்திரம், புதுநடிகர் நடிக்கும் ஜோஷ்வா, அருண்விஜய் நடிக்கும் ஒரு படம் ஆகிய திரைப்படங்கள் வரிசையாகக் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவை மட்டுமின்றி சூர்யாவுக்காக ஒரு திரைக்கதையை உருவாக்கும் பணியிலும் அவர் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது குயின் தொடர்.











