December 9, 2021
செய்திக் குறிப்புகள்

மொரிஷியஸ் தீவில் முழுப்படப்பிடிப்பு – கோல்மால் படக்குழு உற்சாகம்

‘மிருகா’ படத்தைத் தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி.வினோத் ஜெயின் அடுத்து தயாரிக்கும் படம் ‘கோல்மால்’.

இப்படத்தில், ஜீவா மற்றும் மிர்ச்சிசிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள பொன்குமரன் இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் மற்றும் கே.எஸ்.ஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.

அருள் தேவ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவை எஸ்.சரவணன் கையாளவுள்ளார். படத்தொகுப்பை டான் போஸ்கோவும், கலை இயக்கத்தை சிவாவும் மேற்கொள்ள, கவிஞர்கள் மதன் கார்க்கி மற்றும் விவேகா பாடல்களை இயற்றவுள்ளனர்.

முழுநீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்குப் படமாக கோல்மால் இருக்கும், இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும், ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும் என்று பொன்குமரன் கூறுகிறார்.

நேற்று (அக்டோபர் 10,2021) காலை பூசையுடன் தொடங்கிய இப்படம், முழுக்க மொரிஷியஸ் தீவில் படமாக்கப்படவிருக்கிறதாம்.இதனால் ஒட்டுமொத்த குழுவும் உற்சாகமாக இருக்கிறதாம். நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள்.

Related Posts