தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர்கள்,நடிகைகள். இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் 90 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம்
செய்திகள்
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா.விக்ரமின் 58 ஆவது படமான இதை, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.
நடிகர் விஷாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுவிட்டார்.இந்தத் தகவலை அவரே வெளியிட்டார். அதன்பின் கொரோனாவிலிருந்து மீண்டது தொடர்பாக காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விஷால். அதில் அவர் கூறியிருப்பதாவது…… ஒரு கெட்ட நேரத்தில் இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீண்டு வந்தோம் என்று மற்றவர்களுக்குச் சொல்வதில் எந்த வகையிலும் தவறில்லை. என் தந்தைக்கு முதலில்
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தமிழ்த்திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் விஷால் மற்றும் அவருடைய அப்பா ஜி.கே.ரெட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று தகவல் வெளியானது. இது தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது……: ஆம், உண்மைதான், என்னுடைய அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் எனக்கும் அதிக ஜுரம், சளி, இருமல்
2005 ஆம் ஆண்டில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர் 2012 இல் வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே. அதன்பின்,அவருடைய தயாரிப்பில் ’சலீம்’, ’இந்தியா – பாகிஸ்தான்’, ’பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ’எமன்’,
சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் அருவா என்கிற படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் 40 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.ஆர்.வேல் ராஜ்
மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, பிசாசு மற்றும் அண்மையில் வெளியான சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இளையராஜாவுடன் முரண்பட்டுக் கொண்டாராம் மிஷ்கின்.இனிமேல் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற இயலாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம். மிஷ்கின் இப்போது, சிம்பு நடிக்கும் புதிய படம்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஐதராபாத்தில் தொடர்ந்தது. கொரோனா சிக்கல் காரணமாக அந்தப் படப்பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு நீண்டு கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தைத் தொடர்ந்து எடுக்கும் முடிவை படக்குழு கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்தாலும் இந்தப்படத்தில் சுமார் இரண்டாயிரம்
மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் முதன்முறை இயக்கியுள்ள படம் லாக்கப். இந்தப் படத்தில் வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிதின் சத்யா தயாரித்துள்ள இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதில் முதன் முறையாக வெங்கட் பிரபு வில்லனாக நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான படம் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜீத்தின் சந்தை மதிப்பு உயர அந்தப்படம் காரணமாக இருந்தது. அதேபோல அஜீத் மூன்று வேடங்களில் நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வரலாறு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத், அசின் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இப்போது இவ்விரு





















