Home செய்திகள் Archive by category சினிமா (Page 190)

சினிமா

சினிமா செய்திகள்

பொன்மகள்வந்தாள் இயக்குநர் மன்னிப்பு கேட்டார்

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் நேரடியாக இணையதளத்தில் வெளியாகியுள்ள முதல் படமாக
சினிமா செய்திகள்

வெளிவருமுன்பே திருடுபோன ஜோதிகா படம் – அதிர்ந்த அமேசான்

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக இணையதளத்தில் வெளியானது. இப்படம் இன்று அதாவது மே 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இரவு பனிரெண்டு மணிக்கு படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவே படம் வெளியாகிவிட்டது. அதற்குக் காரணம், படத்தை வெளியிடவிருந்த அதிகாரப்பூர்வ தளமான
சினிமா செய்திகள்

பொன்மகள் வந்தாள் படத்துக்கு பாரதிராஜா கே.வி.ஆனந்த் அட்லி சமுத்திரக்கனி பாராட்டு

ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் திரையரங்குக்கு வராமல் ஓடிடி எனப்படும் இணைய தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29 ஆம் தேதி இணையதளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
சினிமா செய்திகள்

புதிய பட வேலையில் மணிரத்னம், பொன்னியின் செல்வன் என்னாச்சு?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு நீண்ட தாமதங்களுக்குப் பின், 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இரத்தானது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த சில நாட்களில்
சினிமா செய்திகள்

நாங்கள் தெளிவாக இருக்கிறோம் – மணிமேகலையின் சூடான பதில் மக்கள் பாராட்டு

சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பல ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கி வந்தவர் மணிமேகலை.இப்போது விஜய் தொலைக்காட்சியில் இருக்கிறார். இவர், ஹுசைன் என்பவரை நீண்ட காலமாகக் காதலித்தார். ஆனால், அவருடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, டிசம்பர் 6,2017 அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டார். தனது திடீர் பதிவு திருமணம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 6,2017
சினிமா செய்திகள்

கவுண்டமணி பிறந்தநாள் – 25 சுவாரசிய தகவல்கள்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாள் மே 25. அதையொட்டி இயக்குநர் விஜய்பாலாஜி அவரைப் பற்றிப் பகிர்ந்திருக்கும் பதிவு….. கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டரின் பிறந்த தினமான இன்று (மே 25) அவரின் சில மணியோசைகள் மட்டும் இங்கே… 1. ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது
சினிமா செய்திகள்

முந்தானை முடிச்சு ரீமேக்குக்கு இசை ஏ.ஆர்.ரகுமான் ?

பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த படம் முந்தானை முடிச்சு.1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தில்தான் நடிகை ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது. பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார்.
சினிமா செய்திகள்

சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் படம் என்னவானது?

திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரின் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. அந்தப்படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ்.கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில்
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2019 ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை இரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த
சினிமா செய்திகள்

தமிழ்த்திரையுலகில் நடக்கும் புத்தம்புது முயற்சி – உடனே ஆதரவு கொடுத்த விஜயசேதுபதி

கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் தமிழ்த்திரையுலகுக்கு உற்சாகமூட்ட ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது ஒரு குழு. திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரும் அந்த முயற்சியில் முன் நிற்கிறார்கள். இவர்கள் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. அந்தப்படத்தை