சினிமா செய்திகள்

இழுபறியில் இரண்டுநாள் படப்பிடிப்பு – பிகில் பட சிக்கல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 

அண்மையில் அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவின் போதும் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியையொட்டி ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இடம்பெறுவது போன்றதொரு காட்சி படமாக்கப்படவேண்டியிருக்கிறதாம்.

இதற்காக மதுரையிலுள்ள ஒரு பெரிய கல்லூரியில் இரண்டுநாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்று அட்லீ சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

சுமார் இரண்டாயிரம் துணை நடிகர்களை வைத்து எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் , இதற்காக மதுரை போய்வந்தால் செலவு பன்மடங்கு ஆகிவிடும் எனவே சென்னையிலேயே அந்தக் காட்சியைப் படமாக்கிவிடுங்கள் என்று தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறதாம்.

அதோடு ஒரு பெரிய பள்ளியிடம் பேசி அப்பள்ளி முழுவதும் வெள்ளையடித்து வர்ணமும் பூசப்பட்டதாம். எல்லா வேலைகளும் முடிந்த நிலையில், இங்கு எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம் அட்லீ.

இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பயங்கரக் கோபமாம். ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்களாம். 

அந்த இரண்டுநாள் படப்பிடிப்பு நடக்குமா? எனப்து சந்தேகமென்று சிலரும், அட்லீ நினைத்ததை நடத்தாமல் விடமாட்டார் என்று சிலரும் சொல்கிறார்கள்.

என்ன நடக்கிறதெனப் பார்ப்போம். 

Related Posts