Uncategorized

விஷால் விஜய்சேதுபதி படங்களைத் தாண்டிய பிகில்

நவம்பர் 15 அன்று சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் வெளியானது.

அன்று மாலை சில ஊர்களிலும் அடுத்த நாளான நவம்பர் 16 அன்று பெரும்பாலான ஊர்களிலும் விஜய்சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படம் வெளியானது.

இரண்டு புதுப்படங்கள் வெளியான நிலையிலும், மூன்று வாரங்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான விஜய் நடித்த பிகில் படத்துக்கு திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருந்தது என்கிறார்கள்.

சுந்தர்.சி விஷால் என்கிற பெரிய கூட்டணி பெரும் பொருட்செலவு செய்து எடுக்கப்பட்ட படம் போன்ற பலங்களுடன் வந்த படம் அது.

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான படத்துக்குப் பெரும் விளம்பரம் மற்றும் வரவேற்பு இருந்தபோதும் பிகில் படத்துக்கு இருந்த கூட்டம் அதிகம் என்கிறார்கள்.

பிரபல விநியோகஸ்தர் ஒருவர்,திரையரங்குகளில் பிகில் படத்துக்கு 300 பேர் இருக்கிறார்கள்  சங்கத்தமிழன் படத்துக்கு 100 பேர் இருக்கிறார்கள். ஆக்‌ஷன் படத்துக்கு 50 பேர்தான் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

Related Posts