ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் அமெரிக்கப் பாடகி
ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நாயகனாகவும் புதுமுகம் நடாசாசிங் நாயகியாகவும் நடிக்கும்புதியபடம் ஜிப்ஸி.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று நாகப்பட்டினத்தில் தொடங்கியது.
பயணத்தை மையமாகக்கொண்டு ராஜூமுருகன் எழுதிய தொடரையே படமாக எடுக்கிறார்கள்.
நாகப்பட்டினத்தில் முப்பது நாட்கள் நடக்கவிருக்கிறதாம்.
அதைத் தொடர்ந்து கேரளாவில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம்.
அம்பேத்குமார் தயாரிக்கும் இந்தப்படத்தில் அமெரிக்காவில் புகழ்பெற்ற பாடகியான சுசீலாராமன் நடிக்கவிருக்கிறாராம்.
அவர் இரண்டு பாடல்களைப் பாடி நடிக்கவிருக்கிறார். உலகெங்கும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் அவர் தமிழ்ப்படம் மூலம் நடிகையாகவும் ஆகிறார்.











