சினிமா செய்திகள் நடிகர்

விளக்கை அணைத்து சூர்யாவை வெளியேற்றிய தியேட்டர்

நடிகர் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் , இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் ரூபன் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சத்யம் திரையரங்கில் நண்பகல் 12.10 மணிக்கு. படம் திரையிடப்படும். அதற்கு அரை மணி நேரம் முன்னதாக நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள வேண்டும் என்கிற நபந்தனையுடன்தான் நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பார்கள்.

ஆனால் இவர்கள் பனிரெண்டரை மணியைத் தாண்டியும் நிகழ்ச்சி நடத்தினார்களாம். வெறுத்துப்போன திரையரங்குக்கார்ர்கள் அரங்கில் இருந்த விளக்குகளை அணைத்துவிட்டார்களாம்.

இதனால் அவசர அவசரமாக விழாவை முடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

Related Posts