விளம்பரப் பாடலுக்கு இவ்வளவு செலவா? – விழிபிதுங்கும் நயன்தாரா பட தயாரிப்பாளர்
நயன்தாரா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் கோலமாவு கோகிலா.
இந்தப்படத்தை நெல்சன் எனும் பதுஇயக்குநர் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் விளம்பரத்துக்காக பாடல் ஒன்றைப் படமாக்கியிருக்கிறார்கள்.
அந்த விளம்பரப் பாடலை ரவிவர்மன் ஒளிப்பதிவில் விக்னேஷ்சிவன் இயக்கியிருக்கிறார்.
படத்துக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இந்தப் பாடலை விக்னேஷ்சிவன் இயக்கினாரா? அல்லது படம் நிறைவாக இல்லை என்பதால் அதை ஈடுகட்டும் பொருட்டு இந்த விளம்பரப் பாடலை இயக்குகிறேன் என்று உள்ளே வந்திருக்கிறாரா? என்ற பேச்சு உண்டாகியிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க இந்தப் பாடலைப் படமாக்குவதற்காக ஆன செலவும் பெரிது என்கிறார்கள்.
நயன்தாராவின் உதவியாளர்கள் அவருடைய கேரவன் ஆகியன, விக்னேஷ்சிவனுக்கான செலவுகள், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சம்பளம் ஆகியனவற்றை சேர்த்துப்பார்த்தால் சுமார் ஒரு கோடி செலவு என்கிறார்கள்.
லைகா பெரிய நிறுவனம் என்பதால் இதைத் தாங்குகிறது, வேறு தயாரிப்பாளராக இருந்தால் இதைத் தாங்க மாட்டார் என்கிறார்கள்.
இவற்றை ஈடுகட்டுவதற்றகாகவே இப்படத்துக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நயன்தாரா பங்குகொண்டார் என்றும் சொல்லப்
படுகிறது.
எப்படியோ காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார் நயன்தாரா.











