சினிமா செய்திகள்

முதல்பார்வையிலேயே பரபரப்பை ஏற்படுத்திய ஜிப்ஸி

குக்கூ,’ ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து தேசிய விருது பெற்ற இயக்குநர்ராஜுமுருகன். இவருடைய இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக ஜீவா இணைகிறார். இந்தப்படத்துக்கு, ‘ஜிப்ஸி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்தப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்க மாடலிங் மங்கையான நடாஷா சிங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்குபெற்றவர். இவரை இயக்குநர் ராஜு முருகன் தமிழ்பப்டத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்துகிறார்.

தேசிங்கு ராஜா,’ ‘மனம் கொத்திப் பறவை’ ஆகிய படங்களைத் தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத்குமார், இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஜூன் 11 முதல் தொடங்குகிறது. அதையொட்டி படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

நாயகி நடாசாசிங் பர்தா அணிந்து கொண்டு ராமர் வேடம் போட்டவரோடு சேர்ந்து நிற்கிறார். முஸ்லிம் பொண் இந்துக் கடவுளோடு சேர்ந்து நிற்பதால் முதல் பார்வையிலேயே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts