11 ஆண்டுகளுக்குப் பிறகு அஜீத் பட இயக்குநருக்கு நடந்த நன்மை

அஜீத், அசின்,கீர்த்திசாவ்லா, விவேக், லால் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ஆழ்வார்.
இப்படம் 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தது.
அஜீத்தின் தோல்விப் படங்களில் ஒன்றாக அது அமைந்துவிட்டது. அதனால் அஜீத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆனால் அப்படத்தை இயக்கிய செல்லாவுக்கு அடுத்த படம் கிடைக்கவில்லை.
11 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, செல்லா அடுத்த படத்தை இயக்குகிறார்.
திருச்சித்திரம் தயாரிப்பு நிறுவனம் மருத்துவர்.மா.திருநாவுக்கரசு என்பவர் தயாரிக்கிறார், அப்படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி விரைவில் அறிவிக்கவிருக்கிறார்களாம்.