சினிமா செய்திகள்

கதாநாயகன் ஆகிறார் சதீஷ்

2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சதீஷ். நகைச்சுவை வேடங்களில் நடித்து அவருக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி, ஆர்யா உட்பட பெரும்பாலான கதாநாயகர்களுடன் இணைந்து நடித்ததால் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர். 

அவர் இப்போது கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம். 

அவரைக் கதாநாயகனாக வைத்து இணையதளத் தொடர் தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது.இப்போது திரைப்படங்களிலும் அவர் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம். 

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் பெரிய நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிக்கும் படத்தில் அவர் நாய்கனாக நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒன்றல்ல இரண்டு படங்களில் அவர் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.இந்நிறுவனம் தயாரித்த பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு படங்களுக்கான கதை மற்றும் இயக்குநர்கள் முடிவாகிவிட்டதெனச் சொல்கிறார்கள். 

விரைவில் இவர் நாயகனாக நடிக்கவிருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.
 

Related Posts