நடிகர் பாலா இரண்டாவது திருமணம்
இயக்குநர் சிறுத்தைசிவாவின் தம்பி நடிகர் பாலா. இவர்,தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர்.
மலையாளத் திரையுலகிலும் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.இவர், தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரைத் திருமணம் செய்துகொண்ட பாலா, அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2019 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.
இதனிடையே கேரளாவைச் சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, இரகசியமாக இடண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. இருப்பினும் இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் நடிகர் பாலா மவுனம் காத்து வந்தார்.
இந்நிலையில், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி செபடம்பர் 5,2021 அன்று நடந்துள்ளது.இதுபற்றியும் பாலா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லையென்றாலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.











