சினிமா செய்திகள்

காயத்ரி ரகுராம் எழுதிய சோகக்கதை நிஜத்திலும் நடந்தது

தமிழ்த்திரையுலகின் பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் கதாநாயகியாக நடித்தார்.அதன்பின் நடன இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

முன்னணி இயக்குநர்கள் மற்றும் நாயகர்களின் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிய காயத்ரி ரகுராம், இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

அதன்பின் ‘யாதுமாகி நின்றாய்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.
‘சுஜா மூவீஸ்’ பட நிறுவனம் சார்பில் அவரது தயார் கிரிஜா ரகுராம் தயாரித்துள்ள இப்படத்தில் காயத்ரி ரகுராம்தான் கதாநாயகி.

புதுமுகம் வசந்த், நிவாஸ், லதா, அபிஷேக், சிந்து, வத்சலா, தங்கம் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரேமண்ட் படத்தொகுப்பு செய்துள்ளார்.
அறிமுக இசை அமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படம் குறித்து காயத்ரி ரகுராம் கூறியதாவது….

கவர்ச்சி மிகுந்த திரையுலகில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கும், சில உண்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கதை தான் இப்படம்.

நடனமாடும் பெண்களின் கனவுகளையும், ஆசைகளையும் சொல்லும் படமாக இது இருக்கும். குடும்பத்தில் ஏற்படும் வறுமை சூழ்நிலை காரணமாக,திரையுலகில் கதாநாயகியாக வேண்டும் என்கிற கனவுடன் வந்து அது நிறைவேறாமல் நடனமாடும் பெண்ணாகிறாள். சாதாரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை தொடர்கிறாள்.ஆனால், நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே ‘யாதுமாகி நின்றாய்’ திரைப்படத்தின் கதை என்கிறார்.

இப்படம் 2017 ஆம் ஆண்டே தயாராகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.ஆனாலும் திரையரங்குகளில் படத்தை வெளியிட இயலவில்லை. அதனால் 2020 ஜூன் 19 அன்று இணையதளத்தில் படம் வெளியாகிவிட்டது.

கதையில் நாயகி கதாநாயகியாக ஆசைப்பட்டு நடனக்காரர் ஆகிறார். அதேபோல் ஆசை ஆசையாய் இயக்கிய படம் திரையரங்குகளில் வெளியாகாமல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Related Posts