சினிமா செய்திகள்

கோடிகளில் விற்கும் குறும்படங்கள் – மணிரத்னத்தின் வியாபார உத்தி

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு தாமதமாகும் என்பதால், அமேசான் நிறுவனத்துக்காக புதிதாக இணையத் தொடர் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

மணிரத்னம், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நரேன் என 5 இயக்குநர்கள் இயக்கவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

திடீரென இப்படி தொடர் உருவாக்க்கும் எண்ணம் எப்படி வந்தது?

சில நாட்களுக்கு முன்பாக, நடிகை சுகாசினி, இந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டிலிருந்தபடியே ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார் என்றொரு செய்தி வந்தது.

சின்னஞ்சிறு கிளியே என்கிற அந்தக் குறும்படத்தில் மலையாள நடிகை ஆகானா கிருஷ்ணா, கோமளம் சாருஹாசன், கிருஷ்ணன் ஆகியோருடன் சுகாசினியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியோ ஒளியமைப்பு வசதிகளோ இல்லாமல் ஐ போன் மூலமாக அந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளார் சுகாசினி. ஊரடங்கு சமயத்து நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார் என்று சொல்லப்பட்டதல்லவா?

அந்தப்படத்தை வியாபாரம் செய்யப்போகும்போது சில இலட்சங்கள்தான் கிடைக்கும் என்கிற நிலை.

அப்போது, அரவிந்த்சாமியை வைத்து மணிரத்னம் உதவியாளர் ரிச்சர்ட் என்பவர் இயக்கிய குறும்படமும் முடிந்திருக்கிறது.

இவை இரண்டோடு ஏற்கெனவே தயாரான இன்னும் சில படங்களயும் மொத்தமாகச் சேர்த்துவிட்டால் பெரிய விலைக்கு விற்கலாம் என்கிற யோசனை வந்ததாம்.

அதன்பின் குறும்படம் இயக்கும் பிரபலங்காளைத் தொடர்புகொண்டு இநத யோசனையைச் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

இதனால் சில இலட்சங்களில் உருவாகவிருக்கும் இப்படங்களைப் பல கோடிகள் கொடுத்து வாங்கிக் கொள்ள இணைய நிறுவனம் முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இச்செய்தியறிந்தவர்கள், தங்கள் படைப்புகளின் மூலம் புகழ்பெற்றவர்கள் அந்தப் புகழை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள்.

Related Posts