பொன்மகள்வந்தாள் இயக்குநர் மன்னிப்பு கேட்டார்
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் நேரடியாக இணையதளத்தில் வெளியாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தில் அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்து தவறான சித்தரிப்பு இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
உடனே இதுதொடர்பாக இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது…..
படத்தில் AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று.அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம்.
இந்தத் திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.











