சினிமா செய்திகள்

தி ஃபேமிலிமேன் தொடரில் நடித்த தமிழ் நடிகர்களைப் புறக்கணிக்கக் கோரிக்கை

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இத்தொடரின் மையக்கதையே விடுதலைப்புலிகளையும் அவர்களது வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தையும் மலினப்படுத்தி அதற்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இதனால், தமிழ் உணர்வாளர்கள் அத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் திட்டமிட்டு தமிழினத்தைக் கொச்சைப்படுத்தியவர்களைக் கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், சிம்பு நடிக்கும் மாநாடு படத்தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

எம் தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு?? இவர்கள் திரிப்பதை எல்லாம் சரிசெய்து உண்மையான வரலாற்றைப் பதிவு செய்ய தமிழ்ப் படைப்பாளிகளும்… உலகத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும்.

#நம்வரலாற்றைநாமேஎழுதுவோம்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அதன் பின்னூட்டத்தில் ஏராளமானோர் அவருக்கு ஆதரவாகவும் அந்தத் தொடரை எடுத்தவர்கள் மற்றும
அதில் நடித்தவர்களுக்கு எதிராகக் கடுமையான கருத்துகள் தெரிவித்துவருகிறார்கள்.

அவர்களில் ஒருவர்,

மற்றானுக்கு வாய்ப்பு கொடுத்து மாற்றானுக்கு எல்லா இடமும் கொடுக்குறீங்க தானே முதலில் அந்த படத்தில் நடித்தவர்களுக்கு தடை போட பாருங்கள். ஏன் திரையுலகத்தில் உள்ளவர்கள் அமைதி?

என்று கூறியுள்ளார்.

இந்தத் தொடரில் நடித்தவர்களுக்குத் தடை எனும் கருத்துக்குப் பலத்த ஆதரவு இருக்கிறது.

இவை தமிழ் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்கிறார்கள்.

Related Posts