சினிமா செய்திகள்

அஜீத் பிறந்தநாள் – இயக்குநர் சேரன் பதிவால் பரபரப்பு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்திற்கு இன்று (மே 1) பிறந்த நாள். அவர் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கொரோனா அச்சுறுத்த்தலால் ட்விட்டர் தளத்தில் கூட எந்தவொரு கொண்டாட்டமும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், ரசிகர்களோ தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து குவிந்து வருகிறது.பல முன்னணி திரையுலக பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துகளை சமூகவலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில்….

இன்று அஜித் அவர்களுக்கு பிறந்த நாள். முயற்சி, உழைப்பு இரண்டுமே அவரை இன்று உயரத்தில் வைத்திருக்கிறது.

அவருக்கு நான் சொல்லும் இந்த பிறந்தநாள் வாழ்த்து போய் சேரவாய்ப்பில்லை.. எனவே அவரை உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும் அவரின் ரசிகர்களுக்கு சொல்லி விடுவோம் #HBDDearestThaIaAJITH

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நான் சொல்லும் வாழ்த்து அஜீத்துக்குப் போய்ச் சேர வாய்ப்பில்லை என்று சேரன் சொல்லியிருப்பது பல கேள்விகளை உருவாக்கியிருக்கிறது.

Related Posts