தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்திற்கு இன்று (மே 1) பிறந்த நாள். அவர் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கொரோனா அச்சுறுத்த்தலால் ட்விட்டர் தளத்தில் கூட எந்தவொரு கொண்டாட்டமும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ரசிகர்களோ தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத். இந்தப்படத்தின் தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப்படம் அஜீத் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி












