அட்லியை நிராகரித்த சன் பிக்சர்ஸ்
நடிகர் விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர்.இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனா சிக்கலால் கால வரையறையற்று தள்ளிப் போயிருக்கிறது.இந்தச் சிக்கல் முடிவடைந்தவுடன் அப்படம் வெளியாகும்.
இதற்கிடையே விஜய்யின் 65 ஆவது படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்துவிட்டன.
இறுதியாக விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது.
அப்படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டது.ஆனால் அப்படி இல்லையாம். இது புதுக்கதை என்கிறர்கள். அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதோடு படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது முடிவாவதற்கு முன்பாக தன்னுடைய 65 ஆவது படத்தை இயக்க அட்லியை விஜய் பரிந்துரைத்தார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அட்லி வேண்டாம் என்று கறாராக மறுத்துவிட்டதாம். தயாரிப்பாளர்களுடன் அவர் இணக்கமாக நடந்துகொள்ளமாட்டார் என்பதை அறிந்தே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரை நிராகரித்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் அட்லி மிகவும் நொந்துபோயிருக்கிறாராம்.











