எல்.கே.ஜி இயக்குநருடன் இணையும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் இப்போது இந்தியில் அக்ஷய்குமார் நடிக்கும் லட்சுமிபாம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டன.
இதையடுத்து அவர் தமிழில், ஃபைவ்ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் புது இயக்குநர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அதோடு, ‘சந்திரமுகி 2’ படம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். பி.வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இவற்றிற்கிடையே ஐசரிகணேஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ராகவாலாரன்ஸ்.
அந்தப்படத்தை,ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற எல்.கே.ஜி படத்தின் இயக்குநர் கே.ஆர்.பிரபு இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர் தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா சிக்கல் முடிவுக்கு வந்த பின்பு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.











