அதிரடியாய் சம்பளத்தை உயர்த்திய லோகேஷ்கனகராஜ்
மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
முதலிரண்டு படங்களும் வெற்றி என்பதாலும் மூன்றாவது விஜய் படம் கிடைத்திருப்பதாலும் மிகவும் கவனிக்கப்படும் இயக்குநராகியிருக்கிறார்.
இதனால் அடுத்து இவரை வைத்துப் படமெடுக்க பலர் தயாராகின்றனர்.இந்நிலையில் இவர் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மாஸ்டர் படத்தை இயக்க இவருக்கு மூன்று கோடி சம்பளம் பேசப்பட்டதாம். மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் இவர் இயக்கத்தில் வெளியான கைதி பெரிய வெற்றியைப் பெற்றது.
அதன் காரணமாக மாஸ்டர் படத்தில் பேசப்பட்டதை விட ஒரு கோடி அதிகமாக அதாவது நான்கு கோடி சம்பளம் தருவதாகச் சொல்லப்பட்டதென்றார்கள்.
இப்போது அடுத்த படத்துக்கு அவர் கேட்கும் சம்பளம் பதினைந்து கோடி என்கிறார்கள்.
பெரிய கதாநாயகர்களை வைத்துப் படமெடுத்தால்தான் இயக்குநருக்கு இவ்வளவு சம்பளம் தரமுடியும் என்பதால் தேடி வந்தவர்கள் யோசிக்கிறார்களாம்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்துக்காக இவர் சொன்ன கதைக்கு இன்னும் விடை கிடைக்காத நேரத்தில் இவர் சம்பளம் பற்றி உலவும் இந்தச் செய்தியால் அதிர்ச்சியில் இருக்கிறது திரையுலகம்.











