ஊரடங்கு நேரத்தில் மகேஷ்பாபு செய்வது என்ன?
தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஊரடங்கு நேரத்திலும் ஓய்வில்லை. ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படமெடுக்க விரும்புவதால், ஊரடங்குக் காலத்திலும் அவர் படிப்பதற்காக நிறைய திரைக்கதைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனவாம்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில்….
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தென்னிந்தியத் திரையுலகில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர். அவர் இரசிகர்களிடம் இருந்து மகத்தான அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறார்.
மகேஷ் பாபு தென்னிந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார், மேலும் நாடு தழுவிய புகழ் காரணமாக ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளரின் மனதிலும் முதலிடத்தில் உள்ளார்.
தொற்றுநோய் வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகேஷ் பாபு வீட்டில் இருக்கிறார் எனும் வாய்ப்பைப் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் பயன்படுத்தி, கடந்த ஒரு வாரத்தில் தபால் மூலம் பல ஸ்கிரிப்ட்களை அனுப்பியுள்ளனர்.
மகேஷ் பாபு வீட்டில் இருப்பதால், அவருக்கு ஸ்கிரிப்ட்களைப் படிக்க நேரம் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஏராளமான திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது.
அவர் திரையில் தோன்றும் போது பார்வையாளர்களின் இதயத்தைக் கவர்ந்திழுக்கும் திறன் உடையவர், இதுதான் பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவருடன் பணியாற்ற விரும்புவதற்கான காரணம். மகேஷ் பாபு தனது திறன் மூலம் பார்வையாளர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தி, தனது இருப்பைக் கொண்டு திரைகளை பிரகாசமாக்குகிறார்.
அவரது அபரிமிதமான புகழும் அவரைப் பின்தொடரும் பிரமிப்பும் அவரது படங்கள் பேக் டு பேக் பிளாக்பஸ்டர்களாக இருப்பதற்கு ஒரு காரணம்.
அவரது சமீபத்திய வெளியீடான சரிலேரு நீகேவருவின் வெற்றி, பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக வெளிப்பட்டது. மகேஷ் பாபுவை முதல் முறையாக ஒரு இராணுவ அதிகாரியின் அவதாரத்தில் பார்க்க வைத்தது இத்திரைப்படம்.
இதன் மூலம் மகேஷ்பாபு நடித்த படங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறை 100 கோடி வசூலைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.











