முதன்முறையாக நேரடி இந்திப்படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்
பாகுபலி படம் மூலம் தமிழகத்துக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ்.இவர் நடித்து பத்தொன்பது படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. அதற்குள் இவர் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.
ஒவ்வொரு படத்திலும் சண்டைக்காட்சிகளில் பிரமிப்பூட்டுவது மட்டுமின்றி நடிப்பிலும் ஆச்சரியமூட்டுகிறவராக இருக்கிறார்.
2012 ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ரெபல் பல சாதனைகளைச் செய்தது. அப்படம் பத்துகோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதோடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது இந்தியாவிலேயே அதிக ரேட்டிங் பெற்ற நிகழ்ச்சியாக அப்படம் இருந்தது.
கட்டுக்கோப்பான உடலைப் பராமரிப்பதிலும் தெலுங்கு இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார் பிரபாஸ்.
நடிப்பு, சண்டை, ஈர்ப்பு ஆகிய எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கும் பிரபாஸை வைத்துப் படம் இயக்க எல்லா இயக்குநர்களுமே விரும்புகிறார்களாம்.
தற்போது பிரபாஸ் நடித்துவரும் 20 ஆவது திரைப்படத்துக்கு ‘ஜான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ராதா கிருஷ்ணா குமார் இயக்குகிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை நாக் அஸ்வின் இயக்கவிருக்கிறார். அப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் எடுக்கப்படவிருக்கிறதாம். அதோடு பாகுபலி போல் எல்லா மொழிகளிலும் அப்ப்டத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடவிருக்கிறார்களாம்.
இதன்மூலம் முதன்முறை நேரடி இந்திப்படத்தில் பிரபாஸ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.











