சினிமா செய்திகள்

அருவா பெயரில் எந்த மாற்றமுமில்லை – படக்குழு உறுதி

மார்ச் 1,2020 மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன்படி,சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்துக்கு இசை இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. 2020 தீபாவளி வெளியீடு என்றும் அறிவிக்கப்பட்டது.

அதுபோலவே ஏப்ரல் 6 ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயாரானதாம். கொரோனா ஊரடங்கு காரணமாக அது தள்ளிப் போய்விட்டது.

அதேநேரம் இப்பட அறிவிப்பு வந்தவுடனே, இதேபெயரில் இன்னொரு படம் தயாராகியிருக்கிறது எனவே இப்பெயரை படத்துக்கு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது அதனால் பெயர் மாறுமா? என்று செய்திகள் வந்தன.

இதுதொடர்பாகப் படக்குழுவினர் தரப்பில் கேட்டால், பெயர் மாற்றம் எதுவும் இல்லை இந்தப்பெயரிலேயே படம் தொடங்கும் படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு நிலைமை சரியானதும் இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts