October 19, 2026
சினிமா செய்திகள்

துப்பாக்கி 2 அல்ல – விஜய் 65 பற்றிய புதிய தகவல்கள்

விஜய் 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.

விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய வெற்றிப்படமான துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று பரவலாகச் சொல்லப்பட்டது.

துப்பாக்கி படத்தில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் விஜய் 65 படத்திலும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டதால் அது துப்பாக்கி 2 தான் என்பது உறுதியாகிவிட்டதாகச் சொன்னார்கள்.

ஆனால் படக்குழு அதை மறுத்துள்ளது.

இது துப்பாக்கி 2 அல்ல என்றும் இது முழுக்க முழுக்க புதிய கதை என்றும் சொல்கிறார்கள்.ஏற்கெனவே பல இரண்டாம் பாகக் கதைகள் படமாகிக் கொண்டிருப்பதால் இந்தப்படத்துக்குப் புதியகதை எழுத வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் உறுதியாக இருந்தார் என்கிறார்கள்.

அதோடு படத்தில் தெலுங்கில் புகழ்பெற்றிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே இன்னொரு நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts