சினிமா செய்திகள்

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகினார் மிஷ்கின்?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் விஷால்தான். இலண்டனில் படப்பிடிப்பு முடிந்து சில வாரங்கள் ஆகியும் அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்து எந்தச் செய்தியும் இல்லை.

விஷால்  சக்ரா படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதால் இந்தப்படத்தின் வேலைகள் நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இலண்டன் படப்பிடிப்பின்போது அதன் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்ட விஷாலின் நண்பரான நடிகர் ரமணா, இயக்குநர் மிஷ்கினிடம் தகாத முறையில் பேசிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அதை விஷால் கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் கோபமான மிஷ்கின், இனி இந்தப்படத்தைத் தொடரமாட்டேன் என்று சொல்லி படத்திலிருந்து விலகிக் கொண்டார் என்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வியாபாரம் உள்ள ஒரு படத்திலிருந்து மிஷ்கின் விலகியதால் அதிர்ச்சியடைந்த விஷால் அவரைச் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தச் செய்தி குறித்து மிஷ்கின் தரப்பில் கேட்டால், இந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்கிறார்கள்.

Related Posts