Uncategorized

விஜய்சேதுபதியின் லாபம் முதல்பார்வையால் பரபரப்பு

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம்.

நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

மேலும் கலையரசன்  சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அழுத்தமான கதைக்களத்தோடு பொழுதுபோக்கு அம்சங்களும் கலந்து உருவாகி வரும் லாபம் படத்தின் முதல்பார்வை நேற்று (சனவரி 11) வெளியிடப்பட்டது. ..

உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில் புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளது.

 இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும் இணைந்து தயாரிக்கின்றன.  இமான் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் முதல்பார்வையை வெளியிட்ட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் பேசியதாவது,

“இங்கு சுட்டவர்களும்  குடிமக்கள் தான். சுடப்பட்டவர்களும் குடிமக்கள் தான்” என்றார்.

ஒற்றைவரியில் படத்தின் கதைக்கருவை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

இதனால் இப்படம் வெளியானால் பரபரப்பு நிச்சயம் என்கிறார்கள்.

Related Posts