September 21, 2026
சினிமா செய்திகள்

விஷால் வேண்டுகோள் ஆர்யா ஒப்புதல்

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்த கே.பி.ஃபிலிம்ஸ் பாலு  பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. 
விரைவில் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருக்கிறதாம்.

இந்தப்படத்தில் முக்கிய வேடமொன்றில் ஆர்யா நடிக்கவிருக்கிறார் என்பதுதான் முக்கிய செய்தி. 
மிகவும் சக்திவாய்ந்த அந்த வேடத்தில் ஆர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் விரும்பியிருக்கிறார். 
உடனே விஷால் ஆர்யாவிடம் பேசியிருக்கிறார். ஆர்யாவும் ஒப்புக்கொண்டாராம்.

ஏற்கெனவே பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts