சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்துக்கு இந்தியில் என்ன பெயர் தெரியுமா?

கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகவிருக்கும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இன்று தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்காக மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர்.

அங்கு சுமார் நாற்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்கிறார்கள்.

இந்த முதல்கட்டப் படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கும் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப்படத்தைத் தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

தமிழ் தவிர பிற மொழிகளுக்கு வேறு பெயர் வைத்திருக்கிறார்கள்.
அந்தப்பெயர் சோழா.
சோழமன்னன் என்கிற பொருளில் சோழா என்கிற பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம்.

Related Posts