செய்திக் குறிப்புகள்

நான் அவளைச் சந்தித்த போது படத்தின் கதை -இயக்குநர் விளக்கம்

‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியிருக்கும் படம் நான் அவளைச் சந்தித்த போது.

சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களோடு ஜி.எம்.குமார், பருத்திவீரன் சுஜாதா, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு – ஆர்.எஸ்.செல்வா
இசை – ஹித்தேஷ் முருகவேல்
பாடல்கள் – அறிவுமதி, நா.முத்துக்குமார், எல்.ஜி.ரவிச்சந்தர்,நல்.செ.ஆனந்த்
கலை – ஜெய்காந்த்
படத்தொகுப்பு – ராஜாமுகம்மது
நடனம் – சிவசங்கர், பாலகுமாரன் – ரேவதி, தினேஷ்
சண்டைப்பயிற்சி – ஹரி தினேஷ்
தயாரிப்பு – V.T.ரித்திஷ்குமார்

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது..

1996 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கி உள்ளோம். சினிமாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றும் நாயகன், வழக்கமாக வாய்ப்புத் தேடிப் போகும் போது வழியில் இளம்பெண் ( நாயகியை ) ஒருவரைச் சந்திக்கிறான்.

சென்னையில் தன் உறவினரின் வீட்டிற்கு வந்தவள் முகவரியைத் தொலைத்துவிட்டு வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

அவரைக் காப்பாற்றி அவளின் ஊர்வரை கொண்டு போய் விட போகிறார் நாயகன். போன இடத்தில் ஊர்க்காரர்கள் இருவரையும் காதலர்கள் என தவறாக நினைக்கிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது?. நாயகன், நாயகி என்ன ஆனார்கள்? என்பதே இந்தப் படத்தின் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது

படம் முடிந்து வெளியே வரும்போது அனைவருக்கும் மனதில் ஒரு ஆழமான உணர்வு இருக்கும்.

படம் இம்மாதம் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இவ்வாறு இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர் கூறினார்.

Related Posts