ஒரே இயக்குநருக்கு போட்டிப் போடும் ரஜினி, விஜய்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168’ படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்நிலையில், சிவா படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் ரஜினிகாந்த். அதற்கான ரஜினி தரப்பிலிருந்து ஏ.ஆர்.முருகதாஸிடம் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், தர்பாரை முடித்துவிட்டு, விஜய்க்கு படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏனெனில், தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். இந்தப் படத்தை முடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் விஜய்.
சிக்கல் என்னவென்றால், சிவா படத்தை ரஜினி முடிப்பதற்கும், விஜய் 64 படத்தை விஜய் முடிப்பதற்கு ஏப்ரல் ஆகிவிடும். எப்படியும் மே மாதத்துக்கு மேல் தான் இரண்டு நடிகர்களும் தேதி ஒதுக்குவார்கள்.
இப்படி, ஒரே நேரத்தில் இரண்டு உச்ச நடிகர்களின் பட வாய்ப்பு வருவதால் தடுமாற்றத்தில் இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.











