கைதி ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப்படம் தீபாவளி நாளான அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமையன்றே வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது அதில் திடீர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.
கைதி படம் அக்டோபர் 25 வெள்ளிக்கிழமையன்றே வெளியாகவிருக்கிறதாம்.
பண்டிகை நாளில் வெளியாவதுதான் சரி என்று தயாரிப்பு நிறுவனமும் கார்த்தியும் நினைத்திருந்தாலும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குக்காரர்கள் வேண்டுகோளுக்கிணங்க அக்டோபர் 25 வெள்ளிக்கிழமையன்றே படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.











