Uncategorized

தயாரிப்பாளரானார் அருள்தாஸ்

ஒளிப்பதிவாளராகத் தன் பயணத்தைத் தொடங்கி நடிகராகப் புகழ்பெற்றிருப்பவர் அருள்தாஸ். அவர் இப்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.

அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதியபடத்தை அவர் தயாரிக்கவிருக்கிறாராம். 

இந்தப்படத்தை மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்குகிறாராம்.

மதயானைக்கூட்டம் படத்துக்குப் பிறகு அவர் இராவணகோட்டம் என்றொரு படத்தைத் தொடங்கினார். சாந்தனு நாயகனாக நடித்த அந்தப்படம் பாதியில் நிற்கிறதாம்,

அதற்கிடையே இந்தப்படத்தைத் தொடங்கி ஒரே மூச்சில் முடித்துவிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

Related Posts