இந்தியன் 2 படத்தில் இணைந்த இந்தி நடிகர்
ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.
சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
கடைசி நேரத்தில் அவர் படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லி விலகிக் கொண்டாராம்.
படப்பிடிப்பு நடத்துகிற தேதிகளும் அவருடைய தேதிகளும் ஒத்துப்போகவில்லை என்பதால் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டாராம்.
அவருக்குப் பதிலாக இந்தியிலிருந்தே இன்னொரு நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று கமல் உறுதியாகச் சொல்லிவிட்டாராம்.
அதனால் படப்பிடிப்பு நடக்கும் தேதிகளுக்கு இசைவாக இருந்த அபிஷேக் பச்சனை ஒப்பந்தம் செய்யவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
ஆனாலும் இந்தியன் 2 தொடங்குவதில் நிறைய தாமதம். அதனால் அவரும் நடிக்க முடியாமல் போயிருக்கிறது.
இப்போது படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பில் இந்தி நடிகர் அனில்கபூர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
இவர் ஏற்கெனவே ஷங்கர் இயக்கிய நாயக் படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











