ரஜினியின் 2.ஓ சீனா ரிலீஸ் தேதி உறுதியானது
2018 நவம்பர் 29 ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.ஓ திரைப்படம் வெளியானது.
இந்தப்படம் சீன மொழியில் குரல்மாற்றம் செய்யப்பட்டும், துணைத் தலைப்புகளுடனும் சீனாவில் வெளியாகவிருக்கிறது.
அங்கு 10,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 56,000 காட்சிகள் (அதில் 47,000 காட்சிகள் 3Dயில்) திரையிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
சீனாவில், ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியும் பயன்பாடும் அதிக அளவில் இருக்கிறது.அந்த ஸ்மார்ட்போன்களினால் ஏற்படும் ஆபத்து குறித்த இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படம் மே மாதம் 10 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அப்போது வெளியாகவில்லை.
இப்போது முழுமையாகத் தயாராகிவிட்டதாம். எனவே ஜூலை 12 ஆம் தேதி இப்படம் சீனா முழுவதும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமே சீனாவில் நேரடியாகப் படத்தை வெளியிடுகிறதாம்.










